Ad Banner
 பொது

நாட்டின் வறுமை விகிதம் 0.09 விழுக்காடாகக் குறைந்துள்ளது

30/10/2025 04:14 PM

கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா)-- இந்த ஆண்டு குறைந்த வருமானம் பெரும் பிரிவினரின் உதவித் திட்டங்களுக்காக அரசாங்கம் வழங்கிய சுமார் 2000 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு நாட்டின் வறுமை விகிதத்தை 0.09 விழுக்காடாக குறைக்க உதவியது.

மாநில அரசாங்கம் மற்றும் மாநில இஸ்லாமிய மன்றம் ஆதரவுடன், சமூக நலத் துறை உதவி உட்பட ராமா (RAHMAH) உதவித் தொகை- STR, ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, i-SARA ஆகியவையும் இதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

'''சேர்க்கப்பட்ட பட்டியலில் 0.09 விழுக்காடு மீதமுள்ளது என்றால், அது வறிய நிலை. அது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. அந்த பட்டியலில் உள்ள எண்ணிக்கை தற்போது தீர்க்கப்பட்டது. ஈ-காசே தரவுகளிலிருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மேலும் அதைத் தீர்க்கும் திறன் நம்மிடம் உள்ளது.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம். 

தீவிர வறுமை மற்றும் ஒட்டுமொத்த வறுமை பிரச்சனையை நிவர்த்தி செய்வதில் மடானி அரசாங்கத்தின் அடைவுநிலை குறித்து கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கன்டார் துல்கர்னைன் அப்துல் காலிட்டின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அன்வார் அவ்வாறு பதிலளித்தார். கிளந்தான் மற்றும் கெடா உள்ளிட்ட மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பின் வழி தீவிர வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)