குவாங்டோங், 28 அக்டோபர் (பெர்னாமா) -- ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட விமானம் திங்கட்கிழமை தெற்கு சீனா, குவாங்டோங் மாகாணத்தின் குவாங்சோ நகரத்தில் உள்ள பயுன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இவ்விமானம் 176 பயணிகளை ஏற்றிக் கொண்டு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை மணி 4 அளவில் குவாங்சோவை சென்றடைந்தது.
பெரும்பாலான பயணிகள் கென்ட்டன் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவும் ஓய்வெடுக்க அல்லது வணிகத்திற்காகவும் அங்கு பயணம் மேற்கொண்டனர்.
2020-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான பயணங்கள் செயல்பாட்டில் இருந்தன.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]