பண்டார் சன்வே, 28 அக்டோபர் (பெர்னாமா) -- ஊழலை எதிர்த்து போராடுவதில் வழங்கப்பட்ட பொறுப்பு மற்றும் நெருக்கமான பொது-தனியார் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் வட்டார நெறிமுறையை வலுப்படுத்த ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி, மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்த ஆசியானின் விரிவான மேம்பாடு என்பது வெளிப்படைத்தன்மை, நெறிமுறை மற்றும் நீதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ அசாலீனா ஓத்மான் சைட் எடுத்துரைத்தார்.
"ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான பொறுப்பு, அரசாங்கம், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் சொந்தமானது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. வழங்கப்படும் அர்ப்பணிப்புகளின் மூலம் மட்டுமே நேர்மையை மதிக்கும், பொது நலனைப் பாதுகாக்கும் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஓர் அமைப்பை நாம் உருவாக்க முடியும்", என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பண்டார் சன்வேயில் 21-வது ஆசியான்-PAC முதன்மை கூட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் அதனை கூறினார்.
மேலும், இந்தோனேசிய ஊழல் தடுப்பு ஆணையம், கே.பி.கே-வின் துணைத் தலைவர் ஃபிட்ரோ ரோஹ்சஹியந்தோவிடம் இருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கியிடம் ஆசியான்-PAC தலைமை பொறுப்பு ஒப்படைக்கும் அங்கமும் அதில் இடம்பெற்றது.
இதனிடையே, அக்டோபர் 30-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கும் இக்கூட்டம், ஊழலை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளில் வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உறுப்பு நாடுகளுடன் கருத்துகளைப் பறிமாறிக் கொள்ளவும் மற்றும் புதிய கட்டமைப்பை உருவாக்கவும் ஒரு முக்கியமாக தளமாக அமையும் என்றும் டத்தோ ஶ்ரீ அசாலீனா விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)