ஆஸ்திரியா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- ஆஸ்திரியா யென்னி பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் யென்னிக் சின்னர் முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர் கசக்ஸ்தானின் அலெக்சாண்டர் புப்ளிக்கை நேரடி செட்களில் வீழ்த்தினார்.
கடந்த ஜூன் மாதம் சந்தித்த ஓர் ஆட்டத்தில் அலெக்சாண்டரால தோற்கடிக்கப்பட்ட யென்னிக் சின்னர் இந்த ஆட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அதன் பயனாக 6-4 6-4 என்ற புள்ளிகளில் அவர் வெற்றிகரமாக அடுத்த சுற்றில் கால் வைத்தார்.
அரையிறுதி ஆட்டத்தில் சின்னர் அலெக்ஸ் டி மினௌர் உடன் களம் காணவிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினௌர் முன்னதாக 6-1, 7-6 எனும் நிலையில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை நேரடி செட்களில் தோற்கடித்திருந்தார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி 6-3, 6-4 எனும் நேரடி செட்களில் பிரான்சின் கோரன்டின் மௌடெட்டை வீழ்த்தி அரையிறுதிக்குத் தேர்வாகினார்.
அந்த அரையிறுதி ஆட்டத்தில் 2021-ஆம் ஆண்டு வியன்னா பட்டத்தை வென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவவுடன் முசெட்டி போட்டியிடுவார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)