Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆசியான்47; உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சிலர் கோலாலம்பூர் வந்தடைந்தனர்

24/10/2025 02:17 PM

சிப்பாங், 24 அக்டோபர் (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக கம்போடியா மற்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் உட்பட சில ஆசியான் தலைவர்கள் நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தனர்.  

கம்போடிய துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான பார்க் சொக்கொன் நேற்றிரவு மணி 9.25-க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ வந்தடைந்த வேளையில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹசாக் புவாங்கெட்கியோ இரவு மணி 8.30-க்கு வந்தார்.

புரூணையின் இரண்டாவது வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ செத்தியா எரிவான் பெஹின் டத்து பெகெர்மா ஜெயா முஹமட் யூசோஃப் மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் மா. தெரசா பி. லசாரு ஆகியோரும் நேற்று கோலாலம்பூர் வந்தடைந்தனர். 

ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் பங்காளி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இன்றும், அடுத்து சில நாள்களில் அரசாங்கம் மற்றும் நாட்டின் தலைவர்களும் வருகையளிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மலேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு ஆசியான் மாநாடு "உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றது. 

இம்மாநாடு ஆசியானின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

இது வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உலகளாவிய சவால்களை ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய முறையில் எதிர்கொள்ளவும் ஒரு முக்கியமான தளமாக செயல்படும்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]