Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆசியான் 47; வட்டார அளவிலான கொள்கையை வலுப்படுத்தி மலேசியா வரலாறு படைத்தது

23/10/2025 05:28 PM

புத்ராஜெயா, 23 அக்டோபர் (பெர்னாமா)-- ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்புடைய இதர உச்சநிலை மாநாடுகள் ஆகியவை மலேசியா மற்றும் ஆசியானின் அணுக்கமான நிலைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் வட்டார அளவிலான கொள்கையை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக வரலாறு படைத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

இம்முறை நடைபெறும் மாநாடு ஆசியான் உறுப்பு நாடுகளையும் சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற ஆசியாவின் பாரம்பரிய கூட்டமைப்புகளையும் ஒன்றிணைப்பது மட்டுமின்றி.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்களையும் உட்படுத்தியுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"ஆப்பிரிக்க கண்டம் மற்றும் லத்தீன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் நட்பு மற்றும் வர்த்தக விரிவாக்கத்தைத் தொடங்குவதில் மலேசியா மற்றும் ஆசியானின் புதிய உத்தியை இது காட்டுகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா மற்றும் பிரேசிலின் லூலா (லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா) ஆகியோரின் வருகையால் கட்டணப் பிரச்சினை தீர்வுக்கு முயற்சிக்கப்படும் என்பதால் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் வருகையும் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது." என்று பிரதமர் தெரிவித்தார். 

மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதன் வழி மலேசியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செப்டம்பர் 7 ஆம் தேதி பதவியேற்ற பிறகு இது அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)