பொது

பள்ளிகளில் பிரம்படி; மறுபரிசீலனை வேண்டும்

23/10/2025 06:09 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா)-- மாணவர்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளிகளில் பிரம்படியை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

எனினும், அந்த பிரம்படி தவறான முறையிலும் மாணவர்களைத் துன்புறுத்தும் வகையிலும் இல்லாமல் கடுமையான மற்றும் தெளிவான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அன்வார் சுட்டிக் காட்டினார்.

''பிரம்பின் பயன்பாடு குறித்த எனது தனிப்பட்ட கருத்தில் நான் குரல் கொடுத்தேன். திருப்பி வரவேண்டும். ஆனால், பாதுகாப்பான வழியில். பொதுவில்ல அல்ல. பிரம்பு கையில் இருக்கலாம் முழுமையான தளர்வுகள் அல்ல. நான் ஆசியராக பணியாற்றியுள்ளேன். பல மாணவர்கள் பிரம்பால் அடிக்கப்படுவதை நான் நினைவுக்கூர்கின்றேன். கையில் அது வேண்டும். ஆனால், நிச்சயமாக வெளிப்படையான துன்புறுத்தலாக இருக்கக் கூடாது என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம். 

பிரம்படி என்பது துன்புறுத்துதல் என தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்க அதிகபட்ச எண்ணிக்கையிலான அடிகள் மற்றும் அவற்றை செயல்படுத்த அனுமதிக்கப்படும் ஆசிரியர்கள் போன்ற புதிய வழிகாட்டுதல்கள் அவசியம் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், இவ்விவகாரம் இன்னும் கல்வி அமைச்சின் கண்காணிப்பில் இருந்தாலும் எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக சு.ஹா.கா.ம் (SUHAKAM) எனப்படும் மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் கருத்துகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகள் வெறும் தண்டனையைப் பற்றியது மட்டுமல்ல மாறாக சமச்சீர் ஒழுக்க கல்வியின் மூலம் மாணவர்களின் ஒழுக்கத்தையும் சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் பிரதிபலிப்பதை அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் நினைவுப்படுத்தினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)