Ad Banner
 விளையாட்டு

மீண்டும் சிவசங்கரியின் கனவு கலைந்தது

21/10/2025 08:09 PM

அமெரிக்க, 21 அக்டோபர் (பெர்னாமா)-- 2025 அமெரிக்க பொது ஸ்குவாஷ் போட்டியில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை சி. சிவசங்கரியின் கனவு இம்முறையும் ஈடேறாமல் போனது.

நேற்று, Philadelphia-வில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் நாட்டின் முதன் நிலை ஸ்குவாஷ் வீராங்கனையான அவர் உலகின் 18-ஆவது நிலை வீராங்கனையான எகிப்தைச் சேர்ந்த சனா இப்ராஹிம்மிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஆர்லன் ஸ்பெக்டர் ஸ்குவாஷ் மையத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் முதல் செட்டில் சிவசங்கரி 11-13 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

இருப்பினும் இரண்டாம் செட் ஆட்டத்தில் தனது அபார விளையாட்டு திறனை வெளிப்படுத்தி 12 -10 என்ற புள்ளிகளை அடைந்த அவர் மூன்றாம் செட்டில் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் 9 -11 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தார்.

அடுத்த ஆட்டத்தில் கடும் போட்டி நிலவிய வேளையில் இடமாற்றத்திற்குப் பின்னர் சனாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால் 10 -12 என்ற புள்ளிகளில் சிவசங்கரி அவரிடம் தோல்வி கண்டார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)