Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சபா தேர்தல்: வேட்பாளர்களின் பட்டியல் & தொகுதிகளில் எண்ணிக்கை அறிவிக்கப்படும்

17/10/2025 05:42 PM

ஜாலான் பெர்னாமா, 17 அக்டோபர் (பெர்னாமா) -- 17வது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் தொகுதிகளில் எண்ணிக்கையையும் வேட்புமனு தாக்கல் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தேசிய முன்னணி அறிவிக்கும்.

அம்மாநிலத்தின் 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடாது என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நாங்கள் 73 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட மாட்டோம். ஆகவே, கவனம் செலுத்தப்படும் பகுதிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அவற்றை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் (நவம்பர் 15-க்கு ஒரு வாரத்திற்கு முன்னர்) மட்டுமே அறிவிப்பேன். தயார் நிலையில் உள்ளோம். கடந்த 16-வது மாநிலத் தேர்தலைக் காட்டிலும், இம்முறை நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

வியாழக்கிழமை, பெர்னாமா தொலைக்காட்சியின் Ruang Bicara நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர், டாக்டர் அஹ்மாட் சாஹிட் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கருத்துரைத்த அவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது சபா மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து போட்டியிடும் ஒவ்வொரு மாநிலத் தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளைத் தேசிய முன்னணி இரட்டிப்பாக்கும் என்றும் கூறினார்.

இம்முறை தேர்தலிலும் சபா மக்கள் கூட்டணி GRSஉடன் இணைந்து தேசிய முன்னணி செயல்பட போவதில்லை எனும் நிலைப்பாட்டையும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் மீண்டும் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)