பாலிங், 16 அக்டோபர் (பெர்னாமா) -- கெடா பாலிங்கில் உள்ள பள்ளி ஒன்றில் பதின்ம வயது பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று ஆண் மாணவர்களையும் ஒரு முன்னாள் மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 8.11க்கு பாதிக்கப்பட்ட 53 வயது நபரின் நெருங்கிய உறவினரிடம் இருந்து சம்பவம் தொடர்பான புகாரை தங்கள் தரப்பு பெற்றதாகப் பாலிங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. அகமது சலீமி எம்.டி அலி கூறினார்.
அதே நாளில் காலை 11 மணி அளவில் நிர்வாண காணொளி ஒன்று பரவியது தொடர்பில் கட்டொழுங்கு ஆசிரியர் புகார் அளித்தவரிடம் தெரிவித்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டி.எஸ்.பி. அகமது சலீமி அலிகுறிப்பிட்டிருந்தார்.
அதை தொடர்ந்து, விசாரணக்கு உதவும் பொருட்டு மூன்று மாணவர்களையும் ஒரு முன்னாள் மாணவரையும் போலீசார் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் உட்பட மேலும் பல இடங்களில் குழுக்களாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டதாக டி.எஸ்.பி. அகமது கூறினார்.
இதனிடையே, சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படும் ஆபாச காணொளிகளைச் சேமித்து அதனை விநியோகிக்கும் செயலிலும் அச்சந்தேக நபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேல் விசாரணைக்காகச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)