கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- இவ்வாண்டிற்கான வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மிதமானதாக இருக்கும் என்று தொடக்கக்கட்ட அறிக்கைகள் கூறினாலும், அதன் தயார்நிலை பணிகள் விரிவான ஒருங்கிணைப்பு மூலம் மேம்படுத்தப்பட வேண்டும்.
மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா ஒத்துழைப்புடன் முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், வெள்ள நீர் உயரத் தொடங்குவதற்கு முன்னரே மக்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை எளிதாக்கும் பொருட்டு வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் வலியுறுத்தினார்.
''அரசாங்கம் செய்யும் செயல்களை எவ்வளவு அல்லது எவ்வளவு குறைவாக செயல்படுத்துவது பயனுள்ளதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல. மாறாக, இந்த பேரிடர் விவகாரத்தில் வேறுபட்ட அரசியல் நிறங்கள் இல்லாதபடி சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் முக்கியம்'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் 2025-ஆம் ஆண்டு SME Venture @ASEAN நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் தேசிய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)