Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம்; மலேசியா வெற்றி

15/10/2025 06:23 PM

கோலாலம்பூர், 15 அக்டோபர் (பெர்னாமா) -- 2027-ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம்.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், மலேசியா லாவோசை 5 -1 என்ற கோல்களில் வீழ்த்தி சிறப்பான அடைவுநிலையை பதிவு செய்தது.

இதன் வழி, கடந்த நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஹரிமாவ் மலாயா அணி F குழுவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை லவோசில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், அவ்வணியை 3-0 என்ற கோல்களில் தோற்கடித்த மலேசியா, நேற்று புக்கிட் ஜாலீல், தேசிய அரங்கில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் கூடுதல் பலத்துடன் களமிறங்கியது.

19-வது நிமிடத்தில் தனது ஒரே கொலை அடித்து, வலோஸ் முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தது.

இரண்டாம் பாதியில் புதிய உக்தியுடன் விளையாடத் தொடங்கிய ஹரிமாவ் மலாயா, ஐந்து கோல்களை அடித்து, வலோசை திக்குமுக்காட வைத்தது.

இந்த வெற்றியின் வழி, மலேசிய 12 புள்ளிகளுடன் முதல் நிலையில் உள்ள நிலையில், வியட்நாம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)