பெட்டாலிங் ஜெயா, 15 அக்டோபர் (பெர்னாமா)-- நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது மாணவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 16 வயது மாணவனை விசாரணைக்காக 7 நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க, பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலீசாரின் விண்ணப்பத்திற்கு அனுமதியளித்த பிறகு, மாஜிஸ்திரேட் ஷாஹ்ரில் அனுவார் அகமது முஸ்தபா அந்த தீர்ப்பை வழங்கினார்.
இன்று தொடங்கி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை ஏழு நாள்களுக்கு சம்பந்தப்பட்ட மாணவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
இன்று காலை மணி 8.40-க்கு அந்த முதலாம் படிவ மாணவர் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்று காலை மணி 9.30-க்கு அதே பள்ளியில் பயிலும் 14 வயது மாணவி ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே மாணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட மாணவியின் நல்லுடல் இன்று காலை அவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP ஷம்சுதீன் மமட் தெரிவித்தார்.
நேற்றிரவு மலாயாப் பல்கலைக்கழக மருத்து மையம், PPUM-இன் தடயவியல் துறையில் பிரேத பரிசோதனை செயல்முறைகள் நிறைவடைந்ததும் காலை மணி 7.30க்கு அம்மாணவியின் சடலம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)