Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2026 வரவு செலவுத் திட்டம்: மக்களுக்கு உதவுவதை உறுதி செய்யும் வழிமுறை - பிரதமர்

10/10/2025 11:51 AM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் நான்காவது மடானி வரவு செலவுத் திட்டம், எண்ணிக்கை மற்றும் செலவுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.

மாறாக, நாட்டின் கடன் சுமையை அதிகரிக்காமல் அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு உதவுவதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறை இதுவென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மடானி 2026 வரவு செலவுத் திட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவிருக்கிறார்.

2026 வரவு செலவுத் திட்டத்தில், மக்களைப் பாதுகாப்பது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்துவது ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று புதன்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோது பிரதமர் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)