கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) -- 158 திட்டங்களின் ஆய்வு மற்றும் மேம்பாடுகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு 33 கோடியே பத்து லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கியுள்ளது.
12-வது திட்டத்தின் கீழ் உள்ள இந்நிதி, அதிக பயனளிக்கும் ஆய்வு திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் உள்ளூர் புத்தாக்கத்தை மேம்படுத்தக் கூடிய புதிய அறிவுசார் கண்டுபிடிப்புகளை உருவாக்க வகை செய்யும் என்று துணைப் பிரதமர்துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் கூறினார்.
''நிதி ஆதாரங்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் மலேசிய அறிவியல் அறக்கட்டளை அல்லது எம்.எஸ்.இ-ஐ நிறுவியுள்ளது. இது நிறுவனத்தின் கிரான்ட், அனைத்துலக நிதி, செஸ் நிதி, நன்கொடை வழங்குபவர்கள், முதலீட்டாளர்கள், வாக்காஃ ஆகிய பல்வேறு துறைகளின் நிதியை நிர்வகிக்கும். அரசாங்க வளங்களை அதிகமாகச் சார்ந்திருக்காமல் நிலையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியை ஆதரிக்கவும் உதவுகிறது..'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற NICE எனப்படும் புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போது டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமை, வணிகமயமாக்கல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்க்க மலேசியா புத்தாக்க சுற்றுச்சூழலை பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)