கிழக்கு ஜாவா, 05 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவில் உள்ள இஸ்லாமிய பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்டெடுக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு ஜாவாவின் தேடல் மற்றும் மீட்பு அலுவலகத் தலைவர் நாநாங் சிகிட் தெரிவித்தார்.
இன்னும் 25 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சிடொர்ஜா மாவட்டத்தில் உள்ள அந்த இஸ்லாமிய பள்ளியில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டிட பராமரிப்பு பணிகளால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், ஏறத்தாழ 100 மாணவர்கள் அதில் பாதிக்கப்பட்டனர்.
கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், எவரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று கூறப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]