கிழக்கு ஜாவா, 07 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, சிடொவர்ஜொ எனும் பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.
அடையாளம் காணும் பொருட்டு, கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுவரை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் காணாமல் போன மாணவர்களும் அடங்கலாம் என்று இந்தோனேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், BNPB-இன் துணைத் தலைவர் புடி இராவான் கூறினார்.
மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் தற்போது சமன் செய்யப்பட்டுவிட்டதால் இனி அங்கு மாண்டவர்களின் உடல்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 167 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 104 பேர் காப்பாற்றப்பட்டனர்.
99 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை, நான்கு மாடி கட்டிட மேல் தளத்தில் கான்கிரீட் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது அக்கட்டிடம் இடிந்து விழுந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]