Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஜி.எஸ்.எஃப் : மலேசியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒத்திவைப்பு

04/10/2025 05:33 PM

சிப்பாங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வியாழக்கிழமை, GLOBAL SUMUD FLOTILLA, ஜி.எஸ்.எஃப் மனிதாபிமானப் பணியின் போது இஸ்ரேலிய படையால் கைது செய்யப்பட்ட மலேசியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய ஆர்வலர்கள் அனைவரும் பாதுகாப்பான மற்றும் சீரான நிலையில் இருப்பதாக சுமாட் நுசாந்தாரா கட்டுப்பாட்டு மையம், SNCC-இன் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் மலேசிய தன்னார்வலர்களில் ஒரு பகுதியினருக்கு வழக்கறிஞரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் மறுக்கப்பட்டதாக டாக்டர் சானி அராபி Araby கூறினார்.

23 மலேசியர்களையும் விடுவிக்க, இந்த 48 மணி நேரம் என்பது மிகவும் முக்கியமான காலம் என்று அவர் விளக்கினார்.

“அடுத்த கட்டத்தை செயல்படுத்த இந்த செயல்முறை சிறிது தடைபட்டது. அவர்களால் இரண்டாவது முறையாக சந்திக்க முடியவில்லை. மேலும் இந்த இரண்டாவது கட்டம் இறுதி பேச்சுவார்த்தைகளுக்கு மிக முக்கியமான நேரமாகும். அதோடு, சட்டவிரோத இஸ்ரேல் அரசின் காவலில் இருந்து அவர்களை விடுவிக்க ஒரு கடிதம் அல்லது பிரகடனத்தில் அவர்கள் கையெழுத்திடுவார்கள், என்றார் அவர்.

இஸ்ரேலிய ஆட்சியால் தடுத்து வைக்கப்பட்டிருந்த G-S-F தன்னார்வலர்கள் குழு, "சுதந்திர பாலஸ்தீனம்" என்று கோஷமிட்டதை அடுத்து, குறைந்தது ஐந்து மணி நேரம் கைகள் கட்டப்பட்டு மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் டாக்டர் சானி அராபி உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)