செர்டாங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- கிரேக்கத்திலிருந்து நாடு திரும்பும் GSF தன்னார்வலர்களுக்கு விரிவான சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொடர் சிகிச்சையை வழங்க மலேசிய சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.
அவர்களுக்கு உளவியல் மற்றும் மன ஆதரவு உட்பட சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
''அவர்கள் திரும்பியவுடன், தேசிய மனநல மையம் மூலம் விரிவான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் உளவியல் ஆதரவுகளை தொடர்ந்து வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளது. அது எங்கள் சேவை.,'' என்றார் அவர்.
சனிக்கிழமை, சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், டாக்டர் சுல்கிப்ளி அவ்வாறு கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பான அண்மைய முன்னேற்றங்களை சுகாதார அமைச்சு அறிந்து வைத்திருப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து தன்னார்வலர்களின் நிலைமையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)