சிப்பாங், 03 அக்டோபர் (பெர்னாமா) -- காசாவிற்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சென்ற GLOBAL SUMUD FLOTILLA, GSF எனும் பயணத்தில் ஈடுபட்ட 23 மலேசியர்களும் இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை யூதர்கள் இடைமறிப்பு செய்த 20 மணி நேரத்திற்குப் பின்னர், SUMUD NUSANTARA செயல்பாட்டு மையம், SNCC-இன் தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி உறுதிபடுத்தினார்.
காசா கடற்கரைக்கு மிக அருகில் இருந்த ஆர்டெல் அர்யனாவை ஏற்றிச் சென்ற மிக்கேனோ கப்பலும், இஸ்ரேலியப் படையால் இடைமறிக்கப்பட்டதை டாக்டர் சானி அராபி உறுதிபடுத்தினார்.
“அவர்கள் காசாவை அடைந்துவிட்டதாக சில ஆருடங்கள் உள்ளன. எனவே, அவர்கள் அனைவருக்குமாக நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். 20 மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்படத் தொடங்கிவிட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். விரிவாக, அவர்கள் மலேசியர்களா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் எஷ்டோட் துறைமுகத்திற்குள் நுழையத் தொடங்கியுள்ள கப்பல்களைப் பார்க்கும்போது, கரைக்கு வரத் தொடங்குபவர்களில் அல்மா மற்றும் சிரியஸ் கப்பல்களாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்”, என்றார் அவர்.
சிப்பாங்கில் நேற்றிரவு நடைபெற்ற SNCC செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)