Ad Banner
Ad Banner
 உலகம்

காசாவில் அதிகரிக்கும் மருத்துவ நெருக்கடி

28/09/2025 02:52 PM

காசா, 28 செப்டம்பர் (பெர்னாமா) -- காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளதால், அடைக்கலம் நாடி பாலஸ்தீன மக்கள் காசாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும், போரினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு வழங்கும் மருத்துவமனைகளும் மிகப் பெரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.

போரினால் எரிபொருள் விநியோகம் குறைந்து வருவதால் மருத்துவமனைகள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை பாலஸ்தீன மக்களுக்கு உயிர்நாடியாக செயல்படுகிறது.

இருப்பினும், மருத்துவ வசதிகள் சேதமுற்றிருப்பதால் அல்-ஷிஃபா மருத்துவமனை செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் போதிய மருந்துகள் தட்டுப்பாடுகளுக்கு இடையே மருத்துவ ஊழியர்கள் அயராது உழைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், எரிபொருள் பற்றாக்குறையினால் அல்-ஷிஃபா மருத்துவமனை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 65,926 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)