Ad Banner
Ad Banner
 பொது

1,060 வணிக வாகனங்களை ஜே.பி.ஜே பறிமுதல்

30/09/2025 03:03 PM

கோத்தா பாரு, 30 செப்டம்பர் (பெர்னாமா) --   நாடு முழுவதும், கடந்த செப்டம்பர் முதலாம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் Ops Khas Gempur Perdagangan சோதனை நடவடிக்கையில் 1,060 வணிக வாகனங்களை சாலைப் போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே பறிமுதல் செய்தது.

அச்சோதனை நடவடிக்கையில், நேற்று வரை ஐந்து லட்சத்து 44 ஆயிரத்து 403 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பல்வேறு குற்றங்களுக்காக 50,629 வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஜே.பி.ஜே அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.

"வாகனங்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் ஜே.பி.ஜே 124,700 சம்மன்களை வெளியிட்டுள்ளது. ஜே.பி.ஜே பதிவு செய்த அதிக குற்றங்களில் பின்வருவன அடங்கும். ஒன்று, திறமையான ஓட்டுநர் உரிமம் இல்லாதது (சி.டி.எல்), இரண்டு, காலாவதியான எல்.கே.எம் மோட்டார் வாகன உரிமம் மற்றும் வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்பீடு இல்லாதது", என்றார் அவர்.

வணிக வாகனங்கள் பரிசோதனை, கண்காணித்தல் மற்றும் அமல்படுத்துதல் ஆகியவற்றுக்காக, அவரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை இந்த Ops Khas Gempur Perdagangan அமல்படுத்தப்படும் என்று டத்தோ முஹமட் கிஃப்லி  கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)