Ad Banner
Ad Banner
 உலகம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிக்கு எதிராக பாகிஸ்தானில் தடுப்பூசி

27/09/2025 06:41 PM

கராச்சி, 27 செப்டம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிக்கு எதிராக சுமார் 90 லட்சம் இளம் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் ஒரு பகுதியான இந்நடவடிக்கை குறித்து, இணையத்தில் சந்தேகத்தை எழுப்பிய தரப்பினால் தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் கையாளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் சுமார் ஒரு கோடியே 80 லட்சம் சிறுமிகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் முஸ்தபா கமல் தெரிவித்தார்.

இந்நோயினால் பாதிப்படையக்கூடிய 97 விழுக்காட்டினர் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு மாகாணங்கள் தடுப்பூசி இயக்கத்திற்கு தயாராக இருந்த வேளையில், இரண்டு மாகாணங்கள் அதாவது கைபர் பக்துன்க்வாவும் பலுசிஸ்தானும் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி இயக்கத்தை முடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சில பெற்றோர்கள் பரப்பிய ஆதாரமற்ற வதந்திகளை இத்திட்டம் முறியடித்ததாகவும் முஸ்தபா கமல் குறிப்பிட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]