Ad Banner
Ad Banner
 அரசியல்

சபா & சரவாக் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும்

27/09/2025 04:40 PM

தாவாவ், செப்டம்பர் 27 (பெர்னாமா) -- சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார்.

"1963-ஆம் ஆண்டு தொடங்கி முதல் முறையாக, சபா மற்றும் சரவாக்கிற்கான நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தற்போது பிரதமராக உள்ள அன்வார் அறிவிக்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் தொடர்பான கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இரு மாநிலங்களும் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)