குருநேகலா, 26 செப்டம்பர் (பெர்னாமா) -- இலங்கை, குருநேகலாவில் கடந்த புதன்கிழமை கேபள் வாகனம் அறுந்து விழுந்ததில், மூன்று வெளிநாட்டினர் உட்பட ஏழு புத்த பிக்குகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொத்தம் 13 புத்த பிக்குகள் வீடு திரும்பிய வேளையில், கேபள் காரில் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இதர ஆறு துறவிகள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மூன்று துறவிகள் ரஷ்யா, இந்தியா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில கேபள் வாகனத்தின் நிலைமை, கேபள் முனைகள் அறுந்து காணப்படுவது ஆகியவை Derana தொலைக்காட்சி வெளியிட்ட பதிவில் காண முடிந்தது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]