Ad Banner
Ad Banner
 பொது

லெம்பா பந்தாய் இந்தியர்களுக்கான இணைய பகடிவதை விழிப்புணர்வு கருத்தரங்கு

23/11/2025 07:10 PM

கோலாலம்பூர், நவம்பர் 23 (பெர்னாமா) -- இணைய பகடிவதை மற்றும் அச்சுறுத்தலில் இருந்து இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து லெம்பா பந்தாய் இந்தியர்களுக்குப் பிரத்தியேகமான முறையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டதாகத் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR அதிகாரி சுமதி வாடியப்பன் தெரிவித்தார்.

''இம்மாதிரியான கருத்தரங்குகள் நிறைய மேற்கொண்டு விழிப்புணர்வு கொடுத்தோமானால் இணைய பகடிவைதையால் பாதிக்கப்பட்டால் எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியர்கள் அறிந்து கொள்வார்கள்'' என்றார் சுமதி வாடியப்பன்.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு இவ்வாண்டு இரண்டாவதாக முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகச் சுமதி கூறினார்.

இதனிடையே, இணைய பகடிவதை குறித்த விழிப்புணர்வைத் தாங்கள் முன்னதாகப் பெற்றிருந்தாலும் இக்கருத்தரங்கு மேலும் பல தெளிவை வழங்கியதாக அதில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.

''சமீக காலமாக இணைய பகடிவதை சம்பவங்கள் நிறைய பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இணைய பகடிவதையால் பதிக்கப்பட்டால் அதிர்ச்சி ஆகாமல் அதை சம்பந்தப்பட்டவர்களிடம் அதனை கழையும் வழிமுறையைத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்''

மேலும், ''நாம் இணைய பகடிவதையைப் பொருட்படுத்த கூடாது. இணைய பகடிவதை மேற்கொள்ளும் நபர்களைச் சமூக வலைத்தலத்தில் முடக்கிவிட வேண்டும்,'' என்றார் டனேஷ் லெட்சுமணன்.

தொடந்து, ''வேதனையாக இருக்கு பிள்ளைகள் மற்றவர்களைக் கிண்டல் செய்வது. இந்நிலையைத் தவித்து, பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்லைக் கேட்டு நடப்பது சிறப்பாகும்,'' என்றார் ஆசா புல்லை அம்ரோஸ்.

கோலாலம்பூர், அங்காசாபூரியில் உள்ள செண்டெக்கியவான் மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மாணவர், பெற்றோர், கல்வியாளர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)