Ad Banner
Ad Banner
 பொது

ஏ.ஈ.எம்: ஊடக மையத்தை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்ள பெர்னாமா கடப்பாடு

23/09/2025 08:11 PM

ஜாலான் டூத்தாமாஸ், 23 செப்டம்பர் (பெர்னாமா) --   பல்வேறு முக்கிய மாநாடுகளை நடத்தி, விரிவான அனுபவங்களைக் கொண்டிருக்கும் நிலையில், 57-ஆவது ஆசியான் பொருளாதார கூட்டம், ஏ.ஈ.எம்-மின் போது ஊடக மையத்தை நிர்வகிக்கும் பணியைச் சிறப்பாக மேற்கொள்ள மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா கடப்பாடு கொண்டுள்ளது.

அனைத்துலக நிகழ்ச்சிகளில் விரிவான ஆதரவையும், செய்தியையும் வழங்குவதில் இந்நிறுவனம் வலுவான அடைவு நிலைகளை பதிவு செய்திருப்பதால், ஏ.ஈ.எம் கூட்டத்திற்கான ஊடக மைய நடத்துநராகவும் இயக்குநராகவும் பெர்னாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''முந்தைய பல முக்கிய கூட்டங்களில் ஊடக மையத்தின் தயாரிப்பைச் செயல்படுத்துவதில் உதவிய தனது சொந்த அனுபவம் சீர்த்தூக்கி பார்க்கப்படுகின்றது. இம்முறை பெர்னாமா தனது பணியைச் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்துவதற்குத் தயாராகும் வகையில் கூடுதல் அனுபவத்தையும் சேகரிக்கும்'', என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூர் MITEC-யில் உள்ள பெர்னாமா ஊடக மையத்தைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

இதனிடையே, உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கான செய்தி பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளைத் தயாரிப்பது உட்பட கூட்டம் முழுவதும் செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குவதை உறுதி செய்வதில் பெர்னாமா முக்கிய பங்கு வகிக்கும் என்று நூருல் அஃபிடா விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)