பெய்ஜிங், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம், E-C-R-L-லை, தாய்லாந்தை எல்லையாக கொண்டிருக்கும் கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங் வரை தொடர்வதற்கான பரிந்துரை, இன்னும் ஆரம்பகட்ட விவாதத்தில் உள்ளது.
இவ்விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதில் ஈடுபட்டுள்ள குழு, அதன் விவரங்கள், செலவுகள் மற்றும் கட்டண முறைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்று சீனா, பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகளில் அதிபர் Xi Jinping மற்றும் சீனப் பிரதமர் லீ ஆகியோருடன் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அன்வார் கூறினார்.
நிதியமைச்சருமான அன்வார், அந்தப் பகுதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் அப்பரிந்துரை நிறைவேறும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
"எனவே இப்பரிந்துரை அப்பாதையில் மட்டுமே உள்ளது. அது சுமார் 20 கிலோமீட்டர் அல்லது 25 கிலோமீட்டருக்குள் இருக்கும். தாய்லாந்து எல்லையில் இருக்கும் ரந்தாவ் பஞ்சாங் பகுதிக்கு. கோத்தா பாருவிலிருந்து ரந்தாவ் பஞ்சாங் வரையிலான பகுதி, குறிப்பாக கெரண்டாவ் பஞ்சாங்க், இன்னும் சற்று பின்தங்கியிருப்பதால் இது அடையப்படும் என்று நம்புகிறோம். எனவே, இதன் மூலம், வளர்ச்சி மற்றும் வணிக சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார் அவர்.
சீனா மற்றும் முதன்மை குத்தகையாளர், China Communications Construction நிறுவனம், C-C-C-C-உடனான தொடர் விவாதங்கள் அவசியம் என்று கடந்த மாதம், போக்குவரத்து அமைச்சர் Anthony லோக் மக்களவையில் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)