Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நகர்ப்புற புதுப்பித்தலுக்காக முன்மொழியப்பட்ட பகுதிகள் மாநில அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன

01/09/2025 04:07 PM

புத்ராஜெயா, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- தற்போது, நகர புதுப்பித்தலுக்காக முன்மொழியப்பட்ட பகுதிகள் குறித்து கேள்விகள் எழுப்பட்டு வரும் நிலையில், அவை எதிர்க்கட்சி மாநிலங்களையும் உட்படுத்தி மாநில அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 534 பகுதிகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் அடையாளம் காணப்பட்டு அரசு பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

அதில் 2015ஆம் ஆண்டு திரெங்கானு மாநிலத்தில் 22 பகுதிகளும், 2018ஆம் ஆண்டு கெடாவில் 55 பகுதிகளும் அடங்கும் என்று,

அண்மையில் புத்ராஜெயாவில் நடைபெற்ற நகர்ப்புற புதுப்பித்தலுக்கான சட்ட மசோதா குறித்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் ஙா கூறினார்.

இதைத் தவிர்த்து எஞ்சிய 534 பகுதிகளில், 139 கோலாலம்பூரிலும் மீதமுள்ளவை சில எதிர்தரப்பு மாநிலங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

''கெடாவில் 2018-ஆம் ஆண்டில் அரசு பதிவேட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் அங்கேயே இருந்து கொண்டு எதுவும் செய்யாமல் இருக்கிறீர்கள். ஆனால் இப்போது என்னைக் குறைக் கூறுகிறீர்கள். இது நியாயமா? நியாயமில்லை. நீங்கள்தான் அதை முன்மொழிந்தீர்கள். பிறகு எதற்கு முன்மொழிந்தவற்றை பின்பற்ற மறுக்கிறீர்கள்? இது சற்றும் ஏற்புடையதாக இல்லை.இதுதான் முதல் காரணம்,'' என்றார் அவர்.

அதைத் தவிர்த்து மசோதாவின் முக்கியக் கொள்கையாக உரிமையாளரின் அனுமதி கருதப்படுகிறது.

மேம்பாட்டாளருடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடங்குவதற்கு முன்னர் 80 விழுக்காட்டு வரம்பை உட்படுத்தி உரிமையாளரின் அனுமதி இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் உள்ள பாழடைந்த கட்டிடங்களை மக்களின் நல்வாழ்வுக்காக புதிய தோற்றத்துடன் உருவாக்கும் நோக்கில், கேபிகேடி கீழ் உள்ள நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, PLANMalaysia பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)