சுங்கை பூலோ, 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் தற்போது பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அண்மைய அறிவிப்பைக் கோடிக்காட்டி பேசிய, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடுகள், தமிழ்ப்பள்ளிகளுக்கு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகங்கள், பொது மற்றும் தனியார் கல்விக் கழக மாணவர்களுக்கான உதவிகள் ஆகியவை அம்முயற்சிகளில் அடங்கும் என்று தெரிவித்தார்.
''பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கீடுகள் குறித்து அண்மையில் அறிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடுகள், தமிழ்ப்பள்ளிகளுக்கு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகங்கள், பொது மற்றும் தனியார் கல்விக் கழக மாணவர்களுக்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன. எனவே, நாம் ஒரு கோணத்திலிருந்து மட்டுமே பார்க்கக்கூடாது. நாம் முழுமையாகப் பார்க்க வேண்டும். அதிகமாக வழங்கப்படுகின்றது. குறிப்பாக, 'சாரா', எஸ்.டி.ஆர் போன்ற அதிகமான உதவிகள் இந்தியர்களுக்காக தற்போது வழங்கப்படுகின்றது,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், சுங்கை பூலோவில் நடைபெற்ற Ride Merdeka MADANI நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)