வாஷிங்டன் டி.சி., 10 ஜூலை (பெர்னாமா) -- வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சுதந்திரமான தேர்தல் மற்றும் அமெரிக்கர்களின் அடிப்படை கருத்து சுதந்திரத்திற்கு மறைமுக தாக்குதலைத் தொடுத்த பிரேசிலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த 50 விழுக்காட்டு வரி விதிப்பு குறித்து பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கு அனுப்பிய கடிதத்தை Truth Social எனும் தமது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவேற்றியுள்ளார்.
முன்னதாக, 21 நாடுகளை உட்படுத்தி 20-இல் இருந்து 40 விழுக்காட்டு புதிய வரி விதிப்பை டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரேசில் மீது விதிக்கப்பட்டிருக்கும் 50 விழுக்காட்டு வரி விதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான விகிதமாக உள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]