கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- பேராக், சிம்பாங் பூலாய்யில் பொறுப்பற்ற முறையிலும் மிகவும் ஆபத்தான வகையிலும் சாலைப் போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே-வின் வாகனத்தைச் செலுத்திய அதன் உறுப்பினர் மீது அத்துறை கடுமையான நடவடிக்கையை விரைந்து மேற்கொண்டது
பிற வாகனங்களை முந்தி செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் சாலையில் அதனைச் செய்த குற்றத்திற்காக, அந்த உறுப்பினருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
இவ்வழக்கின் விசாரணை முடியும்வரை, சம்பந்தப்பட்ட அந்நபருக்கு ஜே.பி.ஜே வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக டத்தோ ஏடி ஃபட்லி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த உறுப்பினரை உட்படுத்திய இதர குற்றங்கள் தொடர்பிலும் ஜே.பி.ஜே விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]