பேங்காக் , 07 ஜூலை (பெர்னாமா) - இந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் 33 மாகாணங்களுக்கு தாய்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வடக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளுக்கு பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்க பேச்சாளர் சசிகன் வத்தனாச்சன் தெரிவித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம், மழைநீர் பெருக்கெடுப்பு, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் கண்காணிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர்புடைய நிறுவனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவும் எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்க தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன,'' என்று அவர் திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் உடனடியாக வெள்ளத் தடுப்புகளை ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)