Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இந்தியாவின் ஐ.ஐ.டி-யை நிறுவும் பரிந்துரை முன்வைக்கப்பட்டது

07/07/2025 12:20 PM

ரியோ டி ஜெனிரோ, 07 ஜூலை (பெர்னாமா) -- பிரேசிலில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில், வர்த்தகம், முதலீடு உட்பட மலேசியாவில் இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐ.ஐ.டி-யை நிறுவுவதற்கான பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது.

வர்த்தகம், முதலீடு, இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மலேசியா மற்றும் இந்தியாவின் வியூக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பெரும் ஆற்றல் குறித்த துல்லியமான ஆய்வை தாங்கள் மேற்கொண்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

மலேசியாவின் எதிர்காலத் துறைகளான இலக்கவியல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விண்வெளித் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வம் கொண்டிருப்பதையும் தாம் வரவேற்பதாக அவர் கூறினார். 

ஐ.ஐ.டி-யை நிறுவுவது உட்பட, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பு மூலம் மக்களிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

இந்தியாவில் உள்ள முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் குழுமம் ஐ.ஐ.டி ஆகும்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]