Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

விம்பிள்டன்: சிறந்த 16 ஆட்டங்களுக்கு இகா ஷுவான்டெக் தேர்வு

06/07/2025 04:49 PM

லண்டன், 06 ஜூலை (பெர்னாமா) - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் சிறந்த 16 ஆட்டங்களுக்கு போலந்து வீராங்கனைஇகா ஷுவான்டெக் தேர்வாகினார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் டேனியல் காலின்ஸ்-உடன் விளையாடினார்.

இவ்வாட்டத்தில்  6-2, 6-3 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று, ஐந்து முறை கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள  இகா ஷுவான்டெக்  வெற்றி பெற்றார்.

காலுறுதிக்கு தேர்வாகும் ஆட்டத்தில் அவர்  கிளாரா டௌசனுடன் மோதவுள்ளார்.

மகளிருக்கான மற்றோர் ஆட்டத்தில் மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்டுடன் விளையாடிய 18 வயதானா ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

ஆடவருக்கான பிரிவில் நோவாக் ஜோகோவிச் சிறந்த 16 ஆட்டங்களுக்கு முன்னேறினார்.

சனிக்கிழமை Miomir Kecmanović-வுடன் நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 6-3 6-0 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

காலுறுதி சுற்றுக்கு தேர்வாகும் ஆட்டத்தில் ஜோகோவிச், அலெக்ஸ் டி மினௌருடன் விளையாடவிருக்கின்றார்.

ஆடவருக்கான மற்றொரு மூன்றாம் ஆட்டத்தில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸ் மோதினார்.

இவ்வாட்டத்தில், 6-3, 7-6 , 6-2 என்ற புள்ளிகளில் பென் ஷெல்டன் வெற்றி பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)