ஹிமாச்சல பிரதேசம், 06 ஜூலை (பெர்னாமா) - திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா இன்று தமது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிறந்தநாளை ஒட்டி தமது சீடர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் 14ஆவது தலாய் லாமாவுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர் இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ விரும்புவதாக தெரிவித்தார்.
இதனிடையே, திபெத்திய பெளத்த சமயத்தின் அடுத்த ஆன்மீகத் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் உரிமை தலாய் லாமாவுக்கும் அவர் நிறுவிய அறக்கட்டளைக்கும் மட்டுமே உண்டு என்று இந்தியா தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், புதிய தலாய் லாமாவை முடிவு செய்வதில் சீனாவின் ஒப்புதல் தேவை என்று அந்நாடு கூறியிருப்பதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
1959-ஆம் ஆண்டில் சீனாவின் ஆட்சிக்கு எதிராக திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து டென்சின் கியாட்ஸோ Tenzin Gyatso எனும் இயற்பெயரைக் கொண்ட தலாய் லாமா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)