தாய்லாந்து, 02 ஜூலை (பெர்னாமா) -- தாய்லாந்து பிரதமர் பேதோங்தார்ன் ஷினாவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் சூர்யா ஜுங்-ரங்-ருவாங்கிட் நேற்று இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கம்போடியா உடனான எல்லை பிரச்சனையை முறையாக கையாள பேதோங்தார்ன் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியல் மீண்டும் நெருக்குதலைச் சந்தித்துள்ளது.
கம்போடியா எல்லை பிரச்சினை தொடர்பாக, அந்நாட்டின் அதிபர் ஹன் சென்னுடன் பேதோங்தார்ன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவு கசிந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் முடிவை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் மக்கள் மற்றும் நாட்டின் நலன் கருதியே தாம் அவ்வாறு செய்ததாக பேதோங்தார்ன் கூறியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)