Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்

01/07/2025 06:38 PM

தாய்லாந்து, 01 ஜூலை (பெர்னாமா) --   தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷின்வத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கம்போடியாவின் தலைவர் ஹுன் சென் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து வழக்கு தொடர்பில் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி 36 செனட்டர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

ஹுன் சென் உடனான உரையாடல் தொடர்பில், பேடோங்டார்ன் நேர்மையற்றவர் என்றும் நெறிமுறை தரங்களை மீறியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)