சிம்லா, 01 ஜூலை (பெர்னாமா) -- இந்தியாவின் வட பகுதியான சிம்லாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
எனினும், அதன் குடியிருப்பார்கள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கையாக அதற்கும் அருகில் உள்ள கட்டிடங்களின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சிம்லா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைககளை மேம்படுத்தும் பணிகளால், அது குடியிருப்புகளின் கட்டமைப்பை முற்றிலுமாக சீர்குலைத்து இதுபோன்று நிலச்சரிவுகளை ஏற்படுவதாக சிலர் கூறினர்.
இந்தியாவில், பெரும்பாலும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதாக கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)