வாஷிங்டன், 30 ஜூன் (பெர்னாமா) -- கிளப்புகளுக்கு இடையிலான உலக கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு ஜெர்மனியின் பாயன் முனிக் முன்னேறியது.
இன்று அதிகாலை நடைபெற்ற சிறந்த 16 கிளப்கள் சந்திக்கும் ஆட்டத்தில் அது 4-2 என்று பிரேசிலின் ஃபிளமெங்கோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தேர்வானது.
இந்த வெற்றியின் வழி பாயன் முனிக் அடுத்த சுற்றில் பிரான்சின் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், PSG உடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் சொந்த கோல் பெற்று தனது வேட்டையைத் தொடங்கிய பாயன் முனிக், அடுத்த நான்கு நிமிடங்களில் அதன் இரண்டாவது கோலைப் போட்டது.
பாயனை தடுத்து நிறுத்த போராடிய ஃபிளமெங்கோ அதன் முதல் கோலை 39-வது நிமிடத்தில் அடித்தது.
அதனை அடுத்த சில நிமிடங்களில் பாயன் மீண்டும் ஒரு கோல் அடித்து முதல் பாதியை 3-1 என்ற நிலையில் முடித்தது.
பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு கிளப்களும் தலா ஒரு கோல் போட்டதில் ஆட்டம் 4-2 என்ற நிலையில் நிறைவடைந்தது.
இதனிடையே, காலிறுதி ஆட்டத்தில் பாயன் முனிக் உடன் மோதவிருக்கும் PSG, இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் Inter Miami கிளப்பை அதிரடியாக 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
ஆறாவது நிமிடத்தில் கோல் அடிக்கத் தொடங்கிய PSG, அனைத்து கோல்களையும் வரிசையாக முதல் பாதியில் போட்டு Inter Miami கிளப்பை திணறச் செய்தது.
கோல் மன்னன் லியோனல் மெஸ்சியின் தலைமையிலான Inter Miami காலிறுதிக்கு முன்னேற முடியாமல் விடைபெற்றுக் கொண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)