ஷா ஆலாம், 30 ஜூன் (பெர்னாமா) - கடந்த ஏப்ரல் முதலாம் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் பெட்ரோனாஸுக்கு சொந்தமான நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு நாசவேலை, தேசத்துரோகம் அல்லது அலட்சியம் போன்ற எந்த கூறுகளும் காரணமில்லை.
அனைத்து சாத்தியமான கோணங்களையும் கருத்தில் கொண்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, DOSH, சுபாங் ஜெயா மாநகராண்மைக் கழகம், MBSJ, PETRONAS மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையில் அது தெரிய வந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.
அதோடு, கடைத் தளங்களில் கட்டுமானப் பணிகள், கழிவுநீர் குழாய்களை மாற்றுதல் மற்றும் வெடிகுண்டு அல்லது பிற பொருட்கள் எரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அவ்விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அவற்றில் எதுவும் சம்பவத்திற்கான காரணம் என அடையாளம் காணப்படவில்லை என்று Datuk Hussein தெரிவித்தார்.
இன்று, சிலாங்கூர் மாநிலச் செயலாளர் கட்டிடத்தில் நடைபெற்ற Putra Heights தீ விபத்து விசாரணை அறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பில், அத்தகவல்கள் வெளியிடப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)