ஈப்போ, 27 ஜூன் (பெர்னாமா) -- பேராக், கெரியான் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சியை பாகிஸ்தானிய ஆடவர் ஒருவர் தொடக்கி வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
அவ்விவகாரம் குறித்து தமது தரப்பு புகாரை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
நிருபரின் கேள்வி: ''கெரியானில் பாகிஸ்தான் ஆடவர் பள்ளி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. அமைச்சுக்கு புகார் கிடைத்ததா?''
பதில்: ''விசாரணையில் உள்ளது. நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார் அவர்.
பேராக், ஈப்போவில் நடைபெற்ற மாநில அளவிலான மால் ஹிஜ்ரா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிம்பாங் அம்பாட் செமங்கோல், கம்போங் சமா காகாவில் உள்ள சமா காகா ஆரம்பப்பள்ளியின் தடகள விளையாட்டு போட்டியை பாகிஸ்தானிய ஆடவர் ஒருவர் தொடக்கி வைக்கும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]