கிங்டாவ், 27 ஜூன் (பெர்னாமா) -- சீனாவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, S-C-O கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்திய தற்காப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
பயங்கரவாதம் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து அக்கூட்டு அறிக்கையில் எந்தக் குறிப்பும் இடம்பெறாததால், S-C-O கூட்டு அறிக்கையில் அவர் கையெழுத்திடவில்லை.
அந்த கூட்டு அறிக்கையில், பலுசிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பலுசிஸ்தானில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
S-C-O-விற்கு தலைமையேற்றிருக்கும் சீனாவும், அதன் நட்பு நாடான பாகிஸ்தானும், அக்கூட்டு அறிக்கையில் பயங்கரவாதம் குறித்த நிலைப்பாட்டிலிருந்து திசைதிருப்ப முயன்றதாகவும் இந்தியா கூறியது.
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ராஜ்நாத் சிங், தங்களின் எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தேட வேண்டும் என்று சீன தற்காப்பு அமைச்சர், Dong Jun-னிடம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)