நியூ யார்க், 25 ஜூன் (பெர்னாமா) -- ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட தாக்குதல் ஒரு "பொறுப்பற்ற" நடவடிக்கை என்று ஈரான் சாடியிருக்கிறது.
மேலும், இந்த தாக்குதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2231-இன் செயல்பட்டை பலவீனப்படுத்தியுள்ளாதாக ஈரான் கூறுகிறது.
அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதால் ஈரானின் இறையாண்மையை அந்நாடு மீறியிருப்பதாக ஐ.நா.-வுக்கான ஈரான் தூதர் அமீர்-சயீத் இரவானி தெரிவித்திருக்கிறார்.
''2231 தீர்மானம் அமைதியான தீர்வை ஊக்குவிப்பதற்கும் தேவையற்ற நெருக்கடியைத் தடுப்பதற்கும் மற்றும் மன்றத்தின் பங்கை வலுப்படுத்துவதற்கும் நோக்கமாக இருந்தது. இருப்பினும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீது பொறுப்பற்ற தாக்குதல்கள் இந்தப் பங்கை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன,'' என்றார் அவர்.
2231 தீர்மானம் குறித்து விளக்கமளிக்க ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்தில் அமீர்-சயீத் இரவானி அவ்வாறு கூறினார்.
ஆனால், 2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, ஈரான் தனது யுரேனியம் கையிருப்பை 60 விழுக்காட்டிற்கு அதிகரித்திருப்பதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டனொன் குற்றம் சாட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]