Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இலக்கவியல் பாதுகாப்பை வலுப்படுத்த உறுப்பு நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

24/06/2025 05:58 PM

புத்ராஜெயா, 24 ஜூன் (பெர்னாமா) -  அதிகரித்து வரும் இணைய குற்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் வட்டாரங்கள் தோறும் இலக்கவியல் பாதுகாப்பை வலுப்படுத்த ஆசியான் அமைப்பிற்கு தலைமை ஏற்றிருக்கும் மலேசியா தனது உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இலக்கவியல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு AI-இன் ஆதரவு உட்பட தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப இந்த முயற்சிக்கு அவசர அணுகுமுறை தேவைப்படுதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

எல்லைக் கடந்த தகவல் பகிர்வு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் அதிகரித்து வரும் சிக்கலான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில், சட்ட அமலாக்க நிறுவனங்களின் துணையுடன் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 25-ஆவது ஆசியான் நாடு கடந்த குற்றம் தொடர்பிலான மூத்த அதிகாரி கூட்ட தொடக்க விழாவில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)