பத்து பஹாட், 22 ஜூன் (பெர்னாமா) -- அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேனின் இடைநீக்கத்தை மீட்டுக் கொள்ள முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரையை அக்கட்சி பரிசீலிக்கும்.
அம்னோவின் தொகுதி கூட்டங்களில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு தீர்மானத்தையும் ஆராய்வது என்பது அக்கட்சியின் நடைமுறை வழக்கம் என்று அதன் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறியுள்ளார்.
ஜோகூரில், இன்று பத்து பஹாட் அம்னோ தொகுதி கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் செய்தியாளர்களிடம் அதனைக் கூறினார்.
இது தொடர்பில், டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் இடமிருந்து இதுவரை அம்னோ எந்த மேல்முறையீட்டையும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயினும், இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் ஆய்வு செய்யப்பட்டுப் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
2003 ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கி, அம்னோ உறுப்பினர் பதவியிலிருந்து ஹிஷாமுடின் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)