லண்டன், 02 ஜூன் (பெர்னாமா) -- 2025 பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியில் இருந்து தேசிய ஸ்குவாஷ் விளையாட்டாளர் ஙா ஐன் யோவ் விடைபெற்றுக் கொண்டார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அவர் பிரான்ஸ் விளையாட்டாளரிடம் தோல்வி கண்டார்.
பிரான்சின் விக்டர் குரோயின் உடன் ஐன் யோவ் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் 11-13, 5-11 மற்றும் 7-11 என்ற புள்ளிகளில் 27 வயதான ஐன் யோவ் தோல்வியை தழுவினார்.
மகளிருக்கான பிரிவில், தேசிய வீராங்கனை ஐரா அஸ்மான், எகிப்தின் ஜெய்னா மிக்காவி உடன் மோதினார்.
இவ்வாட்டத்தில் 2-3 என்ற புள்ளிகளில் ஐரா அஸ்மான் தோல்வி கண்டார்.
மகளிருக்கான மற்றோர் ஆட்டத்தில், நாட்டின் நோர் அய்னா அமானி அம்பான்டி, இங்கிலாந்தின் சாரா ஜேன் பேரி இடம் 0-3 என்ற புள்ளிகளில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
தற்போது, மீதமுள்ள நாட்டின் ஒரே பிரதிநிதியான எஸ். சிவசங்கரி மீது எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நாளை காலை அவர் இந்தியாவின் அஹ்னாட் சிங் உடன் விளையாடவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)