பாரிஸ், 02 ஜூன் (பெர்னாமா) -- பிரான்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இத்தாலியின் லோரென்சோ முசெட்டி தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அவர் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் உடன் விளையாடினார்.
இவ்விரு விளையாட்டாளர்களும் கடுமையான போட்டியை எதிர் கொண்டனர்.
இருப்பினும், 7-5 3-6 6-3 6-2 என்ற புள்ளிகளில் லோரென்சோ வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
இவர்களின் ஆட்டம், நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்தது.
மற்றோர் ஆட்டத்தில், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மையருடன் விளையாடினார்.
இதில், 6-3 6-4 7-6 என்ற புள்ளிகளில் தியாஃபோ வெற்றி பெற்றார்.
ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காராஸ் அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி உலகின் முதல் நிலை விளையாட்டாளரான அல்காராஸ் 7-6 6-3 4-6 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தேர்வாகினார்
மகளிருக்கான நான்காம் சுற்று ஆட்டத்தில், இகா ஸ்வியாடெகும் எலெனா ரைபாகினாவும் மோதினர்.
இவ்வாட்டத்தில் 1-6 6-3 7-5 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று நடப்பு வெற்றியாளர் இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)