Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

முதல் முறையாக லீக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது பிஎஸ்ஜி

01/06/2025 04:48 PM

இங்கிலாந்து, 01 ஜூன் (பெர்னாமா) - ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணம்...

வரலாற்றில் முதல் முறையாக பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மன், பிஎஸ்ஜிஅணி வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்றது.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி இன்டர் மிலான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியை தன் வசமாக்கியது.

தமது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடிய அக்ராஃப் ஹகிமி முதல் பாதியின் 12ஆவது நிமிடத்தில் அடித்த கோலின் வழி பிஎஸ்ஜி அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின்னர், 20ஆவது நிமிடத்திலும், இரண்டாம் பாதியில் 63 ஆவது நிமிடத்திலும் 
டேசாயர் டியு இரண்டு கோல்களை அடித்தார்.

அதைத் தொடர்ந்து, Khvicha Kvaratskhelia 73ஆவது நிமிடத்திலும் Senny Mayulu 86 ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலை அடித்த வேளையில் பிஎஸ்ஜி இந்த அபார வெற்றியைப் பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)