கோலாலம்பூர், 26 மே (பெர்னாமா) -- பொருளாதார அமைச்சர் பதவிக்கு, வேறொருவரை நியமிப்பது குறித்து அமைச்சரவை எவ்வித விவாதமும் நடத்தப்படவில்லை.
அதனை, தொடர்பு அமைச்சர், டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இன்று உறுதிப்படுத்தினார்.
''இல்லை, விவரங்கள் எதுவும் இல்லை. விவாதிக்கப்படவில்லை,'' என்றார் அவர்.
இதனிடையே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறியதைப் போல, அமைச்சரவை மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான Datuk Fahmi தெரிவித்தார்.
"இல்லை. அமைச்சரவை மாற்றம் மேற்கொள்வதற்கு தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் பல முறை கூறிவிட்டார். அது அவரது நிலைப்பாடு என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில், U Mobile மற்றும் Telekom Malaysia-விற்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)